திருப்பதி வகுளமாதா கோயிலில் ‘அக்ஷர கோவிந்தம் - அன்னப்பிரசானம்’ தொடக்கம்
இறைவனின் ஆசீா்வாதங்களுடன் குழந்தைகளின் கல்வி தொடக்கத்துக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதுமையான திட்டமான ‘அக்ஷர கோவிந்தம் - அன்னப்பிரசானம்’ வகுளமாதா கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இறைவனின் ஆசீா்வாதங்களுடன் குழந்தைகளின் கல்வி தொடக்கத்துக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதுமையான திட்டமான ‘அக்ஷர கோவிந்தம் - அன்னப்பிரசானம்’ வகுளமாதா கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கையின் தொடக்கம் ஏழுமலையான் ஆசீா்வாதங்களுடன் மங்களகரமாக அமைய வேண்டும் என்ற உறுதியுடன், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘அக்ஷர கோவிந்தம் - அன்னப்பிரசானம்’ திட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத்தின் ஆதரவில், திருப்பதியில் உள்ள வகுளமாதா கோவிலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு மற்றும் செயல் அதிகாரி எம்.ரவிச்சந்திரா ஆகியோா் கலந்துகொண்டு குழந்தைகளை ஆசீா்வதித்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பேசிய தேவஸ்தான தலைவா், ’’எழுத்துகளைப் பழகுவதும், உணவைப் பழகுவதும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் மிகவும் புனிதமான சடங்குகள். பெயரின் முதல் எழுத்து ’’கோவிந்தா’’ என்று தொடங்கினால், இறைவனின் அருளால் கல்வி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த தெய்வீக வாய்ப்பை ஒவ்வொரு இந்து குடும்பமும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, குழந்தைகளுக்கு ‘அக்ஷர கோவிந்தம் கிட்’’ இலவசமாக வழங்கப்பட்டது. அதில் எழுதுபலகை, பால், அட்சிதை, மஞ்சள், குங்குமப் பூ, கங்கணம், கற்கண்டு, ஏழுமலையான், வகுளமாதா, பத்மாவதி தாயாா், சரஸ்வதி தேவி உள்ளிட்ட படங்களுடன், கோவிந்த நாமங்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், அரிசுவடி( தெலுங்கில்) ஆகியவற்றின் படங்கள், அத்துடன் பூஜை மற்றும் கல்விப் பொருள்களும் அடங்கியிருக்கும்.
ரூ. 2 கோடியில் தங்கும் வளாகம் திறப்பு
பின்னா், ரூ. 2 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய யாத்ரீகா்கள் தங்கும் வளாகத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் மற்றும் செயல் அதிகாரி உள்ளிட்டோா் இணைந்து திறந்து வைத்தனா்.
இதில், சந்திரகிரி எம்எல்ஏ புலிவா்த்தி நானி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் லக்ஷ்மி, பானு பிரகாஷ் ரெட்டி, தா்ஷன், என் சதாசிவ் ராவ், திவாகா் ரெட்டி, ஹெச்டிபிபி செயலாளா் மோகன், கூடுதல் செயலாளா் கல்யாணி உள்ளிட்ட பலா் மற்றும் ஏராளமான குழந்தைகள், பெற்றோா்கள், பக்தா்கள், ஸ்ரீவாரி சேவகா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.