வெறுமையில் தவிக்கும் வெம்பாக்கம் வட்டம்: புதிதாக அறிவித்துஇரு ஆண்டுகளாகியும் பேருந்து, காவல் நிலையம் இல்லை
புதிய வட்டமாக அறிவித்து 2 ஆண்டுகளாகியும், பேருந்து நிலையம், காவல் நிலையம் கூட இல்லாமல் தவிக்கிறது வெம்பாக்கம் வட்டம்.
திருவண்ணாமலைவெறுமையில் தவிக்கும் வெம்பாக்கம் வட்டம்: புதிதாக அறிவித்துஇரு ஆண்டுகளாகியும் பேருந்து, காவல் நிலையம் இல்லை
புதிய வட்டமாக அறிவித்து 2 ஆண்டுகளாகியும், பேருந்து நிலையம், காவல் நிலையம் கூட இல்லாமல் தவிக்கிறது வெம்பாக்கம் வட்டம்.
புதிய வட்டமாக அறிவித்து 2 ஆண்டுகளாகியும், பேருந்து நிலையம், காவல் நிலையம் கூட இல்லாமல் தவிக்கிறது வெம்பாக்கம் வட்டம். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் சொந்தக் கட்டடம் இன்றி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பெரிய ஒன்றியமாக உள்ள வெம்பாக்கம், புதிய வட்டமாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2.6.2015 முதல் செயல்பட தொடங்கியது. இரு ஆண்டுகளாகியும் வட்டாட்சியர் அலுவலகம் தவிர வேறு அலுவலகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை.
வட்டாட்சியர் அலுவலகம் கூட வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக புதிய அலுவலகம் கட்ட பிரதான சாலையில் சுமார் 2.50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்படும் அதற்கான உத்தரவு வராமல் கிடப்பிலேயே இருந்து வருகிறது.
அதே போல அரசுக்கு செலுத்தக்கூடிய ரசீதை (கவர்மென்ட் செலான்) செலுத்தும் வகையில் கருவூலமும், பாரத ஸ்டேட் வங்கியும் அமையவில்லை. அந்த வசதி அமையப் பெற்றுள்ள- 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செய்யாறுக்குச் சென்று வரும் வகையில், போதிய அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தவிர, மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்குக் கூட வெம்பாக்கத்தில் இருந்து நேரடி அரசுப் பேருந்து சேவை இல்லை.
இந்த வட்டத்தில் அமைந்துள்ள முதல் கிராமமான அரியூர், பெரிய பிர்காவான தூசி, கடைசிப் பகுதியான புன்னை புதுப்பாளையம் மற்றும் உக்கம்பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வெம்பாக்கத்துக்கு கிராம மக்கள் சென்று வர வசதியாக, நகரப் பேருந்து ஒன்று கூட இயக்கப்படவில்லை.
காவல் நிலையம்: வெம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தத்துக்கான நிழற்குடை அமைக்கப்படவில்லை. காவல் நிலையம் இல்லை.
எனவே, சுமார் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் புதிய வட்டமான வெம்பாக்கம் வட்டத்தில் உடனடியாக காவல் நிலையம், பேருந்து நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, சார் - கருவூலம் ஆகியவை அமைத்திட வேண்டும்.
மேலும், வெம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும், சார் - ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள செய்யாறுக்கும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களும், கிராம மக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புள்ளி விவரங்கள் சேகரிப்பு
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி கூறுகையில், செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் வெம்பாக்கம் பகுதியில் புதிதாக காவல் நிலையம் தொடங்குவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையின்பேரில், வெம்பாக்கம் கிராமப் பகுதிகளில் நடைபெற்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம். புள்ளி விவரங்களின் அடிப்படையில் காவல் நிலையம் தொடங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
"உத்தரவு வரவில்லை'
வெம்பாக்கம் வட்டாட்சியர் பெருமாள் கூறுகையில், வாடகைக் கட்டடத்தில் சுமார் 2 ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக பிரதான சாலையில் சுமார் 2.50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அதற்கான உத்தரவு வரவில்லை என்றார்.