திருவண்ணாமலை

செங்கம் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு முகாம்

DIN

செங்கம் - போளூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் சகோதரி நிவேதிதாவின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை புத்துணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி மதியழகன் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். இதைத் தொடர்ந்து, சுவாமி விமூர்த்தானந்தர், இளைஞனே தலைவனாகிவிடு, படத்தை பார் நீ கற்ற பாடத்தைச் சொல் என்ற தலைப்புகளில் மாணவர்களிடையே பேசினார். பின்னர், முனைவர் தங்கமணி தலைமையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்துணர்வு முகாமில் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளி, புதுப்பாளையம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆலத்தூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, முறையாறு மீனாட்சி கல்வியியல் கல்லூரி, புதுப்பாளையம் இதயா கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் பாண்டுரங்கன், செயலர் ராமமூர்த்தி உள்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT