திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மருத்துவமனை, பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலையங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரே.கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த தருணத்தில் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதில் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, நம்முடைய வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குவதற்கு ஆதாரமாக உள்ள பாலித்தீன் பைகள், காகித கப்புகள், தேங்காய் ஓடுகள், பழைய டயர்களை நீக்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நிலவேம்பு குடிநீர்: நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. டெங்கு உள்பட அனைத்து வகையான காய்ச்சலை குணமாக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பாரம்பரிய மருந்துகள் மாவட்டத்தின் அனைத்து ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளிலும் வேலை நேரங்களில் இலவசமாக வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளிலும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்டோபர் 6, 7) டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழக அரசின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து மருத்துவமனைகள், மக்கள் அதிகாகக் கூடும் பொது இடங்கள், பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்கள் நடத்த ஆயுஷ் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரண காய்ச்சல் வந்தவர்கள் கூட உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரை பருகி, டெங்கு உள்பட அனைத்து வகையான காய்ச்சலும் வராமல் தடுக்கவும், நோய் வந்த பின் குணமடையவும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரே.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT