திருவண்ணாமலை

ஓய்வு பெற்ற வனத் துறை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் திருட்டு

DIN

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற வனத் துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள்,
ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வனத் துறை ஊழியர் மாணிக்கம் (61). இவர், தனது மனைவி இந்திரா, மகன் விநாயகம் ஆகியோருடன் சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணைக்குச் சென்றார். அங்குள்ள உறவினர் வீட்டில் மூவரும் சின தினங்கள் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை மாணிக்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT