திருவண்ணாமலை

மாவட்ட மைய நூலகத்தில் நன்கொடை நூல்கள் பெறும் விழா

DIN

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நன்கொடை நூல்கள் பெறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மைய நூலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான நூல்களை நன்கொடையாகப் பெறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அர.கோகிலவாணி தலைமை வகித்தார். விழாவில், கோட்டை அமீர் விருது பெற்ற சாதிக் பாஷா, போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையிலான பல்வேறு போட்டித் தேர்வு நூல்களை அவர் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். விழாவில், முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, நல் நூலகர்கள் சாயிராம், சுந்தரேசன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT