திருவண்ணாமலை

மினி லாரி கவிழ்ந்து பெண் சாவு: அரசு மருத்துவமனையை கண்டித்து விசிக மறியல்

தினமணி

வந்தவாசி அருகே வெள்ளிக்கிழமை துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது, மினி லாரி கவிழ்ந்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 22 பேர் காயமடைந்தனர்.
 இந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனப் புகார் கூறி, வந்தவாசி அரசு மருத்துவமனையைக் கண்டித்து, மருத்துவமனை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது 8 மாத குழந்தை இறந்ததால், அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் மினி லாரியில் அதியங்குப்பத்துக்கு சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை வேலு ஓட்டினார்.
 புன்னை கிராம கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சாலையோரப் பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பார்வதி (50) சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், பலத்த காயமடைந்த பொன்னம்மாள், தவச்செல்வி, வரதம்மாள், ராணி, காஞ்சனா, வசந்தி, ஜோதி உள்ளிட்ட 22 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 இந்த நிலையில், மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் கூறியும், மருத்துவமனையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வந்தவாசி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வட்டாட்சியர் முரளிதரன், டிஎஸ்பி பொற்செழியன் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT