திருவண்ணாமலை

மது தீமைகள் விழிப்புணர்வுப் போட்டி: மாணவர்களுக்குப் பரிசு

DIN

செய்யாறில் மதுவால் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்ற பள்ளி மாணவி, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
மது விலக்கு அமலாக்கத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செய்யாறு கல்வி மாவட்ட அளவில் மதுவால் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தின.
நிகழ்ச்சியின்போது, பள்ளி மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் (பொ) பி.நடராஜன் தலைமை வகித்து, தொடக்கிவைத்தார். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பி.நடராஜன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி, லியோ வசந்த், பல்லவன், தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT