திருவண்ணாமலை

ஐங்குணம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் 2017-18ஆம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மூத்த குடிமகன் ராமமூர்த்தி தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் தனவந்தன், சமூகத் தணிக்கை அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான நோக்கம் குறித்தும், திட்ட செயலாக்கத்தில் மக்களின் பங்கேற்பை அதிகரித்தல் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மேலும், கிராம சபை, கிராம ஊராட்சியை வலுப்படுத்துவதற்கான திட்ட செயல்பாட்டில் முன்னேற்றங்களைக் கொண்டு வருவது, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், பயனாளிகள் தற்போது மேற்கொள்ள வாய்ப்புள்ள பணிகள் குறித்து  அவர் விளக்கினார்.
கூட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஊராட்சிச் செயலர், தொழில்நுட்ப வல்லுநர் மூலமாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், கனேஷ்வரன் உள்பட கிராம மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT