முகப்பு
திருவண்ணாமலை

தொடர் விபத்துகள் நிகழும் செய்யாறு - ஆரணி சாலை

தொடர் விபத்துகள் நிகழும் சாலையாக செய்யாறு - ஆரணி சாலை இருந்து வருகிறது. 33 கீ.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.

திருவண்ணாமலை

தொடர் விபத்துகள் நிகழும் செய்யாறு - ஆரணி சாலை

தொடர் விபத்துகள் நிகழும் சாலையாக செய்யாறு - ஆரணி சாலை இருந்து வருகிறது. 33 கீ.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

தொடர் விபத்துகள் நிகழும் சாலையாக செய்யாறு - ஆரணி சாலை இருந்து வருகிறது. 33 கீ.மீ. தொலைவுள்ள இந்தச் சாலையில் 66 வளைவுகள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 2-ஆவது வருவாய்க் கோட்டமாக விளங்கி வருகிறது செய்யாறு. இங்கிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையாக இருந்து வருகிறது செய்யாறு - ஆரணி சாலை. இந்தச் சாலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ளன.  மேலும், செய்யாறு, ஆரணி, ஆற்காடு ஆகிய 3 சட்டப் 
பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளும் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், ஆரணி, செய்யாறு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்தும், ஆரணி, களம்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்னையிலிருந்து சரக்கு லாரி போக்குவரத்தும் செய்யாறு -  ஆரணி சாலை வழியாகத்தான் நடைபெற்று வருகின்றன.
66 வளைவுகள்:  33 கி.மீ. தொலைவுள்ள செய்யாறு - ஆரணி சாலையில் பைங்கிணர், அருகாவூர், சுண்டிவாக்கம், இருங்கூர், தட்டச்சேரி, தண்டரை, வடுகப்பட்டு, பெரும்பள்ளம், கன்னிகாபுரம், சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய அளவிலான மற்றும் அபாயகரமான வளைவுகள் என 66-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன.
தொடர் விபத்துகள்: செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை, பெரும்பள்ளம், அருகாவூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.  சாலை குறுகலாக உள்ளதாலும், வளைவுகள் அதிகமாக உள்ளதாலும் இந்தப் பகுதியில் அதிக விபத்துகள் நிகழ்வதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை: எனவே, 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிக்க செய்யாறு - ஆரணி சாலையை அகலப்படுத்திட வேண்டும் என்றும், விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவைப்படும் இடங்களிலும், வளைவுப் பகுதிகளிலும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →