முகப்பு
திருவண்ணாமலை

குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்கக் கோரிக்கை

வேட்டவலத்தில் உடைந்த குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.வேட்டவலம் 14-ஆவது வார்டுக்கு உள்பட்ட சிவன் கோயில் தெருவில் சிறு மின்

Updated On : 15 மே, 2018 at 4:26 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

வேட்டவலத்தில் உடைந்த குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேட்டவலம் 14-ஆவது வார்டுக்கு உள்பட்ட சிவன் கோயில் தெருவில் சிறு மின் விசைக் குடிநீர்த் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியின் அடிப்பாகம் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீர்த் தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.