திருவண்ணாமலை

ஆரணியில் 328 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் வழங்கினார்

DIN


ஆரணி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 328 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.
ஆரணி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளித் தாளாளர் யுஜினிக் பாத்திமா வரவேற்றார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 328 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் கஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன், அவைத் தலைவர் ஜோதிலிங்கம், பட்டு கூட்டுறவு சங்க இயக்குநர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT