திருவண்ணாமலை

சாய்பாபா கோயிலில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு

DIN


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் இருந்து 2 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். சனிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, கோயில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, ஒன்றேகால் அடி உயரமுள்ள ஐம்பொன் சாய்பாபா சிலை, ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை ஆகியவை திருடப்பட்டு இருந்ததாம். 2 சிலைகளும் சேர்ந்து சுமார் 50 கிலோ எடை கொண்டதாம். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
3 கடைகளில் திருட்டு: மேலும், இதே பகுதியில் உள்ள டீ கடை, மளிகைக் கடை, பெயின்ட் கடை என 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், கடைகளில் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகள், மளிகைப் பொருள்களை திருடிச் சென்றனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT