திருவண்ணாமலை

செய்யாறில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

DIN


செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
செய்யாறு கௌதம் நிதி நிறுவனத்தின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த முகாமை நடத்துகின்றன.
முகாமின்போது, கண்புரை அறுவைச் சிகிச்சை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், கண்ணில் குறைபாடு உடையவர்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்துதல், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுதல், மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதி போன்றவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT