திருவண்ணாமலை

வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

DIN

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை முடித்துக்கொண்டனர். திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை திருவண்ணாமலை கடலைக்கடை சந்திப்புப் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இந்தப் பிரசாரத்தில் மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி, மதிமுக மாநில நிர்வாகி சீனி.கார்த்திகேயன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரா.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசினர்.
அதிமுக வேட்பாளர்: அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை காந்தி சிலை எதிரே தனது இறுதிக்கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இவரை ஆதரித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.நேரு, பாமக மாநில நிர்வாகி ரா.காளிதாஸ் ஆகியோர் பிரசாரம் செய்தனர். மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இரா.அருள் தனது இறுதிகட்டப் பிரசாரத்தை கீழ்பென்னாத்தூரில் நிறைவு செய்தார். சுயேச்சை வேட்பாளர்கள் ஆங்காங்கே தங்களது இறுதிக்கட்டப் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை நிறைவு செய்தனர்.
ஆரணி: இதேபோல, ஆரணி நகரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தை அருந்ததிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கினார்.
தொடர்ந்து, புதுக்காமூர் தெரு, தர்மராஜா கோயில் தெரு, ஆறுமுகம் தெரு, பெரியகடை வீதி, மண்டி வீதி, சத்தியமூர்த்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நகரச் செயலர் அசோக்குமார், நகர பேரவைச் செயலர் பாரிபாபு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், தேமுதிக நகரச் செயலர் சுந்தர்ராஜன், பாமக நிர்வாகிகள் வி.எஸ்.வெங்கடேசன், சு.ராஜசேகர், சு.ரவிச்சந்திரன், சதீஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT