திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மயானத்தில் தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து போராட்டம்

DIN

திருவண்ணாமலையில் 3 தலைமுறைகளாக மயானமாகப் பயன்படுத்தப்பட்ட இடத்துக்கு வருவாய்த் துறையினர் அமைத்த தடுப்பு வேலியை பெண்கள் வெள்ளிக்கிழமை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதி மக்கள் 3 தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாகப் பயன்படுத்தி வந்த இடத்தை தனி நபர்கள் சிலர் உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நபர்களுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் இடத்தை அளந்து காண்பிக்குமாறு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது. 
அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் பிரச்னைக்குரிய இடம் அளக்கப்பட்டது.
இந்த இடத்தில் இருந்த கல்லறைகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதி அகற்றி, மயானத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைத்தனர். இதைக் கண்டித்தும், மயானத்தை மீட்டுத் தரக்கோரியும் வியாழக்கிழமை தேனிமலை பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருவண்ணாமலை நகர போலீஸாரின் அறிவுரையின்பேரில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த பொதுமக்கள் சென்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுங்கள் என்று கோட்டாட்சியர் ஸ்ரீதேவி கூறினாராம்.
தடுப்பு வேலி உடைப்பு: இதன்பிறகு மயானத்துக்குச் சென்ற பெண்கள் மற்றும் தேனிமலை பகுதி பொதுமக்கள், வருவாய்த் துறை அமைத்த தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸார் வந்து தடுப்பு வேலியை உடைப்பதைத் தடுத்து பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, வருவாய்த் துறை அமைத்த தடுப்பு வேலியை உடைத்ததாக மயான இடத்துக்கு உரிமை கொண்டாடும் தனி நபர்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
தீர்வு கிடைக்காமல் தொடரும் இந்தப் பிரச்னையால், திருவண்ணாமலையில் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT