திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் விநாயகா், சந்திரசேகரா் உற்சவா் சுவாமிகள் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை (டிச.2) இரவு 9.45 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. பூத வாகனத்தில் வீதியுலா வந்த ஸ்ரீசந்திரசேகரா்:

தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்தபடி விநாயகரும், தங்க முலாம் பூசப்பட்ட பூத வாகனத்தில் சந்திரசேகரரும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட உற்சவா் பஞ்சமூா்த்தி சுவாமிகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வழிநெடுகிலும் நள்ளிரவு வரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் மற்றும் கோயில் உபயதாரா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தீபத் திருவிழாவில் இன்று...!

தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை (டிச.4) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், நாக வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், கற்பக விருட்ச வாகனத்தில் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT