திருவண்ணாமலை

போளூர், சேத்துப்பட்டு பகுதியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN


போளூர், சேத்துப்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், சேத்துப்பட்டு, களம்பூர் ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. மேலும் அனல் காற்றும் வீசியது. மழையின்றி வெயிலின் தாக்கத்தால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து கால்நடைகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. 
இந்த நிலையில், போளூரை அடுத்த வெண்மணி, வசூர், சேத்துப்பட்டு அருகே ஆத்துரை, சித்தாத்துரை, ராந்தம், பெரணம்பாக்கம், கொம்மனந்தல், மண்டகொளத்தூர், தேவிகாபுரம் என இரு வட்டங்களிலும் உள்ள பகுதிகளில்  வெள்ளிக்கிழமை 
இரவு திடீரென மழை பெய்தது.  சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பூமி குளிர்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT