திருவண்ணாமலை

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

DIN

சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் உள்ள திவ்யா கல்வியியல் கல்லூரில் 14-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கல்லூரித் தாளாளர் செல்வராசன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவீன் குமார், முதன்மை நிர்வாக அலுவலர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.
 விழாவில் தாளாளர் செல்வராசன் பேசுகையில், ஒரு தாயிடம் குழந்தை அறிவை கற்று வளர்வதுபோல் கல்லூரி பேராசிரியர்களிடம் மாணவர்கள் ஒரு குழந்தையாக இருந்து அவர்களிடம் உள்ள திறமைகளை கற்று உணர வேண்டும். படித்து முடித்து உயர் பதவிகள் வகிக்கும் போது, சுய வேலைகளை நீங்களே செய்து கொள்ள முன்வரவேண்டும். பொருளாதாரத்தை சிக்கனப் படுத்தினால் உங்களது உடல்நலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும் என்றார்.
 மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி கவிதாவுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம், சான்றிதழை தாளாளர் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT