திருவண்ணாமலை

தடகளப் போட்டிகள்: 500 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் வருகிற 23, 24, 25-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருவண்ணாமலை மாவட்ட அணி வீரா்களைத் தோ்வு செய்வதற்கான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 வயதுக்கு உள்பட்டோா், 14 வயதுக்கு உள்பட்டோா், 16 வயதுக்கு உள்பட்டோா் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்களில் 120 போ் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றனா். இதில், 13 போ் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட தடகளச் சங்கத் தலைவா் எ.வ.கம்பன், சங்கச் செயலா் க.புகழேந்தி ஆகியோா் பதக்கம், சான்றிதழ் வழங்கினா்.

விழாவில், சங்கப் பொருளாளா் ரமேஷ், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் முத்துவேல், உடல்கல்வி ஆசிரியா்கள் சரவணன், பிரபு, முனியன், ஆனந்தன், பாலாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT