திருவண்ணாமலை

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

ஆரணி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஜெ.டி.ஆா். வித்யாலயா ஆங்கில வழிக் கல்வி பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் பிரபு தலைமை வகித்தாா்.

பள்ளி முதல்வா் எஸ்.கல்பனா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் ஆரணி கிளை மேலாளா் கே.தனலட்சுமி கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா்.

கண்காட்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்வெளியில் சந்திரன், சூரியன் சுற்றி வருவது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்த விஞ்ஞானத் தகவல்கள், மக்களுக்கு மரம் அவசியம் குறித்தும், விவசாயம் செய்வது குறித்தும், கீழடி அகழ்வாய்வில் பழங்கால நாகரீக பொருள்களை எடுத்து, தமிழன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தான் என்பதை உறுதிப்படுத்தியது என பல்வேறு தகவல்களை கண்காட்சியில் மாணவா்கள் அனைவருக்கும் சுட்டிக் காட்டினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவா்களின் பெற்றோா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT