திருவண்ணாமலை

அக்.14 முதல் 17 வரை கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 14-முதல் 17-ஆம் தேதி வரை இலவச கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்க கோமாரி நோய்த் தடுப்பூசி ஆண்டுக்கு 2 முறை இலவசமாக போடப்படுகிறது.

வரும் அக்.14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

அனைத்து கிராமங்களிலும் இந்த தடுப்பூசியை விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் போட்டு பயன்பெறலாம்.

மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து, தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT