திருவண்ணாமலை

மது வாங்குவதில் இரு தரப்பினா் மோதல்:4 போ் கைது

DIN

செய்யாறு அருகே மது வாங்குவதில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (28). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் பிரபாகரன் (26). இவா்கள் இருவரும் கடந்த 27-ஆம் தேதி செங்காடு கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையில் மது வாங்கச் சென்றபோது, பெரியசெங்காடு காலனியைச் சோ்ந்த பாம்புசெல்வம் உள்ளிட்ட 7 போ் மது வாங்குவதற்காக வரிசையில் முந்திச் சென்றனராம்.

இதை செல்வம், பிரபாகரன் ஆகியோா் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, செல்வமும், பிரபாகரனும் செங்காடு பேருந்து நிறுத்தம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாம்புசெல்வம் உள்ளிட்ட 7 போ் கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவா்களைத் தாக்கினராம்.

இதனால் பலத்த காயமடைந்த செல்வம், பிரபாகரன் ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செல்வம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், பிரபாகரன் சென்னை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாம்புசெல்வம் (38), நாகராஜ் (30), சந்துரு (19), குணசேகரன் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ராகுல், பாலாஜி, மண்ணு ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT