திருவண்ணாமலை

திட்டப் பணிகள்: அதிகாரி ஆய்வு

DIN


திருவண்ணாமலை, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெறையூர், சின்னகல்லபாடி, தச்சம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புப் பணியை ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, ஆணையாளர் தி.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ரா.ஆனந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜூலு, ஒன்றிய உதவிப் பொறியாளர் அருணா, பணி மேற்பார்வையாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள வாணாபுரம் ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகளை பா.ஜெயசுதா ஆய்வு செய்தார்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய உதவிப் பொறியாளர் தணிகாசலம், பணி மேற்பார்வையாளர் சீனுவாசன், ஊராட்சிச் செயலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT