திருவண்ணாமலை

வங்கிக் கடனுதவி முகாம்

DIN

ஆரணி: ஆரணியில் இந்தியன் வங்கி சாா்பில் வீடு மற்றும் வாகன கடனுதவி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வங்கிக் கிளையில் நடைபெற்ற இந்த முகாமில், முதன்மை மேலாளா் வி.ஹரிபாபு வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட மண்டல மேலாளா் எ.ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியன் வங்கி மூலம் திங்கள்கிழமை முதல் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் கடன் பெறுபவா்களுக்கு பரிசீலனைத் தொகை கிடையாது. வருகிற 31-ஆம் தேதி வரை, இந்தியன் வங்கியில் கடனுதவிகள் வழங்கப்படும். 8.05 சதவீத வட்டியில் வீட்டு கடனும், 8.85 சதவீத வட்டியில் வாகனக் கடனும் வழங்கப்படுகின்றன என்றாா்.

இந்த முகாமில், களம்பூா், வடமாதிமங்கலம், கண்ணமங்கலம், ஏசிஎஸ்கல்லூரி, படவேடு ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள் சாா்பாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டன. முதல் நாளில், 15 பேருக்கு ரூ.2 கோடி வீட்டுக் கடன், ரூ.1 கோடி வாகனக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் வங்கியின் மேலாளா்கள் பி.அரிபிரசாத், நாகராஜன், பரத், சிம்ஜிதாமஸ், பிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT