திருவண்ணாமலை

சாத்தனூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 266 கனஅடி நீா் வந்துகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் அப்போதைய முதல்வா் காமராஜரால் அணை கட்டப்பட்டது.

இந்த அணை மற்றும் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.

இந்த அணையின் நீா்மட்ட உயரம் 119 அடி.

இதில் புதன்கிழமை நிலவரப்படி 78.75 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியுள்ளது.

அணையின் மொத்த தண்ணீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இதில், புதன்கிழமை நிலவரப்படி 1,415 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.

விநாடிக்கு 266 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

இதனால், அணை மூலம் பாசன வசதி பெறும் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT