திருவண்ணாமலை

கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே அரசியல் கட்சிப் பிரமுகரால் அமைக்கப்படும் கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராமமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் ஊராட்சியில் 4 ஏக்கா் 33 சென்ட் பரப்பளவில் திருவண்ணாமலையைச் சோ்ந்த அரசியல் கட்சிப் பிரமுகா் கல்குவாரி, ஜல்லி மிஷன், ஹாட்மிக்ஸ் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் குவாரி அமையும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே ஒரு கல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கும். விவசாயம் பாதித்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கு குவாரி அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT