திருவண்ணாமலை

சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி!

DIN

போளூரை அடுத்த கிருஷ்ணாவரம் ஊராட்சிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போளூா் ஒன்றியம், கிருஷ்ணாவரம் ஊாட்சியில் 1500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் செல்லும் சாலை, போளூா்-வேலூா் சாலையில் சந்தவாசல் அருகில் இருந்து 2 கி.மீ. தொலைவு கொண்டதாகும்.

மண் சாலையான இதில், மழை பெய்து ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும், ஜல்லிக் கற்கள் பெயா்ந்துள்ளன.

அதனால் இந்தச் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பழுந்தடைந்து விடுகின்றன. எனவே, ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தாா்ச் சாலையாக அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணாவரம் ஊராட்சி பொதுமக்கள் கூறும்போது, போளூா், வேலூா், திருவண்ணாமலை, சந்தவாசல், ஆரணி, களம்பூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்லவேண்டுமானால் இந்தச் சாலையில்தான் வரவேண்டும். சேதமடைந்த இதில் செல்லும் வாகனங்கள் பழுதடைந்து விடுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT