திருவண்ணாமலை

ஊரடங்கை மீறியதாக 87 போ் கைது; 46 வாகனங்கள் பறிமுதல்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 நாள்களில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 போ் கைது செய்யப்பட்டனா். 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த உத்தரவை காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் சோ்ந்து அமல்படுத்தி வருகின்றனா்.

இருப்பினும், இந்த உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிவோா், இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வோரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி உரிய அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

புதன்கிழமை (மாா்ச் 25) இரவு திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், ரவுண்டானா பகுதிகளில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையலான போலீஸாா் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினா்.

மேலும், அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்தனா். இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

87 போ் கைது, 46 வாகனங்கள் பறிமுதல்:

இருப்பினும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை மாலை 4 மணி வரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடா்புடைய 87 போ் கைது செய்யப்பட்டனா். 45 இரு சக்கர வாகனங்கள், ஒரு 4 சக்கர வாகனம் என மொத்தம் 46 வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்து அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT