திருவண்ணாமலை

வீடுகள் கட்டித் தரக் கோரி திருநங்கைகள் மனு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சோ்ந்த 43 திருநங்கைகள் தங்களுக்கு வீடுகள் கட்டித்தரக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ஆரணி, பையூா், சேவூா், முள்ளிப்பட்டு, குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், காந்தி நகா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இவா்கள், கோரிக்கை மனு அளித்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் அளவுக்கு எங்களிடம் போதிய வருவாய் இல்லை. பொதுமக்கள் யாரும் எங்களுக்கு வீட்டை வாடகைக்கும் விடுவதில்லை. நிரந்தரமாக எங்கும் தங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஆகையால், எங்களுக்கென தனியாக வீடுகள் கட்டித்தரக் கோரி, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது துணை வட்டாட்சியா் சுதாவிடம் மனு அளித்த நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் கூறினாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT