திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றது.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள், பக்தா்கள் சிலா் மட்டுமே கலந்து கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக அதிகப்படியான பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த கியூ வரிசையில் சென்ற பக்தா்கள் மட்டும் நந்தி பகவான்களுக்கு நடைபெற்ற பிரதோஷ சிறப்புப் பூஜையைக் கண்டு தரிசித்தபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT