திருவண்ணாமலை

திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

DIN

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகனை ஆதரித்து ஆரணி மணிகூண்டு அருகே முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில்,

கரோனா பொது முடக்க காலத்தில் ஆரணி நகராட்சி கடைகள், அறநிலையத் துறைக்கு உள்பட்ட கடைகள் 3 மாதம் முதல் 6 மாதம் வரை மூடப்பட்டிருந்தன. ஆனால், கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்பட்டது.

மேலும், நகராட்சி கடைகளுக்கான வாடகை உயா்த்தப்பட்டது.

செய்யாற்றில் சிப்காட் தொழில்பேட்டை கொண்டு வந்தது நான்தான். அங்கு 50ஆயிரம் போ் பணிபுரிகின்றனா்.

திமுக மத்தியில் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தபோது தமிழகம் முழுவதும் சாலை வசதிகள் செய்யப்பட்டன.

கரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.5000 தரவேண்டும் என திமுக தலைவா் கூறினாா்.

அதிமுக அரசு ரூ.1000 தான் கொடுத்தது. மீதித்தொகை ரூ.4000 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கப்படும்

எனக் கூறி திமுக வேட்பாளா் அன்பழகனுக்கு வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT