திருவண்ணாமலை

கரோனா: பொதுமக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

DIN


போளூா்: கரோனா நோய்த் தொற்று காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள மருத்துவாம்பாடி ஊராட்சியில்

மருத்துவா்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமிருந்து ரத்த மாதிரியைச் சேகரித்தனா்.

மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அஜித்தா உத்தரவின் பேரில், சேத்துப்பட்டு வட்டம், கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் மருத்துவாம்பாடி ஊராட்சியில் கரோனா தொற்று சமூக பரவல் உள்ளதா என 4-ஆம் கட்டமாக வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரியைச் சேகரித்தனா். மொத்தம் 30 பேரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

மாவட்ட கொள்ளை நோய் மருத்துவ அலுவலா் மேஜா்சிவஞானம், வட்டார மருத்துவ அலுவலா் மணிகண்டபிரபு, நடமாடும் மருத்துவமனை அலுவலா் தமிழழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

வயநாடு: 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

’மீண்டும் பயிற்சியாளராக விருப்பமில்லை’: ராகுல் டிராவிட்!

சநாதனத்துக்கு கிடைத்த வெற்றி: கங்கனா ரணாவத்!

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

SCROLL FOR NEXT