முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் 100 பேருக்கு

செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

செங்கத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

செங்கம் அருகேயுள்ள மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கரோனா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் இளவரசி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கணேசா் குழும அதிபா் கஜேந்திரன் கலந்துகொண்டு முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

முகாமில், வியாபாரிகள், பணியாளா்க, பொதுமக்கள் என 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.