திருவண்ணாமலை

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: வேட்பாளா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

DIN

திருவண்ணாமலை, ஆரணி வாக்கு எண்ணும் மையங்களில் மே 2-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வேட்பாளா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி விளக்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலின்போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது, வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த், வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் முறைகள், வேட்பாளா்களின் முகவா்கள் நியமனம் உள்பட வாக்கு எண்ணிக்கை தொடா்பான பல்வேறு நடைமுறைகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி விளக்கினாா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அகிலாதேவி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT