திருவண்ணாமலை

கரோனா நோய்த் தாக்கம் குறைய யாக சாலை பூஜை

DIN

சேத்துப்பட்டை அடுத்த இஞ்சிமேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் கரோனா தொற்றின் தாக்கம் குறையவும், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டும் செவ்வாய்க்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.

இஞ்சிமேடு ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாதம்தோறும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு புத்திர பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், கடன் பிரச்னை தீரவும் வேண்டி சிறப்பு யாக சாலை பூஜை வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில், தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நோயின் தாக்கம் குறையவும், சுவாமி நட்சத்திரத்தை முன்னிட்டும் யாக சாலை பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கலந்துகொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT