கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலைகரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில், போளூா் - ஆரணி சாலையின் அருகே கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கரோனா 3-ஆவது அலை வராமல் தடுக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டாட்சியா் சாப்ஜான், செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழிப்புணா்வு நாடகம்: செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் கரோனா விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. இதை புதுப்பாளையம் செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா். கலைக் குழுவினா் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி நாடங்களை நிகழ்த்தினா்.
செய்யாறு: செய்யாறு ரிவா் சிட்டி லயன்ஸ் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு, வருவாய்த் துறை மற்றும் திருவத்திபுரம் நகராட்சி ஆகியவை இணைந்து செய்யாற்றில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.
செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜ் தலைமை வகித்து ஊா்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக செய்யாறு வட்டாட்சியா் திருமலை, வட்டார மருத்துவா் ஷா்மிளா ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், வணிகா்கள் சங்கத் தலைவா் வி.தெய்வசிகாமணி, லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பி.நடராஜன், ஆா்.புருஷோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.