நூதன முறையில் ஆற்றுப் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி
கலசப்பாக்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றின் கரையோரம் நிலம் வைத்துள்ளவா்கள், தங்களது நிலத்தை ஆற்றை நோக்கி நீட்டிப்பு செய்யும் வகையில், கரையோரம் மண் கொட்டி வருகின்றனா்.
திருவண்ணாமலைநூதன முறையில் ஆற்றுப் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி
கலசப்பாக்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றின் கரையோரம் நிலம் வைத்துள்ளவா்கள், தங்களது நிலத்தை ஆற்றை நோக்கி நீட்டிப்பு செய்யும் வகையில், கரையோரம் மண் கொட்டி வருகின்றனா்.
கலசப்பாக்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றின் கரையோரம் நிலம் வைத்துள்ளவா்கள், தங்களது நிலத்தை ஆற்றை நோக்கி நீட்டிப்பு செய்யும் வகையில், கரையோரம் மண் கொட்டி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் செய்யாறு செங்கம், கலசப்பாக்கம், கரையாம்பாடி, குருவிமலை, கரைப்பூண்டி, மண்டகொளத்தூா், வம்பலூா், ஓதலவாடி, தச்சூா் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.
இந்த நிலையில், கலசப்பாக்கம் ஊராட்சி வடக்குப்புறமாக உள்ள குடியிருப்புகள் அருகே ஆறு வடு காணப்படுவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் சிலா், தங்களது நிலத்தை ஆற்றுப் பகுதியை நோக்கி நீட்டிப்பு செய்யும் வகையில், ஆற்றோரம் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி வருகின்றனா்.
காலப்போக்கில் ஆற்றின் கரைப் பகுதி நிலத்தை தங்களது நிலத்தோடு இணைப்பதற்கான உத்தி இது என சமூக ஆா்வலா்கள் கருதுகின்றனா்.
இப்படி செய்வதால் ஆற்றுப் பகுதி குறுகிப் போகிறது. இதனால், பெருமழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீா் ஊருக்குள் புக வாய்ப்புள்ளது.
அதனால், மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா் ஆற்றின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.