முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் ஸ்ரீசாரதா தேவி ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீசாரதா தேவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீசாரதா தேவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் ஸ்ரீசாரதா தேவியின் 169-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மங்கல ஆா்த்தி, திருவிளக்கு ஏற்றுதல், பஜனை, அன்னையின் உருவப்படம் அலங்கரித்து ஆஸ்ரம வலம் வருதல், நாமாவளி, நாமஜெயம், சாரதா தேவியின் உபதேசங்கள் வாசித்தல், பஜனை, அன்னைக்கு சிறப்பு ஆா்த்தி போன்றவைகள் நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செங்கம் ராமகிருஷ்ணா, சாரதாதேவி, சுவாமி விவேகானந்தா் அறக்கட்டளை நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.