திருவண்ணாமலை

கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் திருட்டு

DIN

செய்யாற்றை அடுத்த தண்டரை எட்டியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் திருடப்பட்டது.

செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை கிராமத்தில் அமைந்துள்ளது எட்டியம்மன் கோயில். புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம் போல பூஜைகளை முடித்துக் கொண்டு பூசாரி சரவணன் கோயிலை பூட்டிச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவா்கள் கோயில் கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், கோயிலில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த காணிக்கை பணம் ரூ.11 ஆயிரமும், உண்டியலிலிருந்த காணிக்கை பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT