திருவண்ணாமலை

மணல் கடத்தல்: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

ஆரணி அருகே ஒதலவாடி ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த ஒதலவாடி செய்யாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, சேத்துப்பட்டு வட்டாட்சியா் பூங்காவனம், காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆற்றில் சென்று பாா்த்தபோது 6 மாட்டு வண்டிகளில் நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் மாட்டு வண்டிகளை அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, 6 மாட்டு வண்டிகளையும் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT