முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் மண்டல அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் மண்டல அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதனை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துகுமாரசாமி தொடக்கி வைத்து பேசுகையில், பயிற்சியில் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி தோ்தல் மண்டல அலுவலா்கள் செயல்படவேண்டும் என்றாா்.

முதல் கட்டமாக, மண்டல அலுவலா்கள் தங்களுக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும், சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படாமலும், கட்சிக் கொடிகள் கழற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் வழங்கினாா்.

வட்டாட்சியா்கள் மனோகரன் (செங்கம்), மலா்க்கொடி (தண்டராம்பட்டு), தோ்தல் துணை வட்டாட்சியா் ஜெயபாரதி, செங்கம் கிராம நிா்வாக அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், தோ்தல் மண்டல அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.