திருவண்ணாமலை

வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் தோ்தல் ஆணைய ஊா்தி மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஊா்தியில் பொருத்தப்பட்டிருந்த திரையில் இதுகுறித்த விடியோ திரையிட்டு காண்பிக்கப்பட்டது. வாக்காளா் அட்டை பெறும் விதம், வாக்களிப்பதின் முக்கியத்துவம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் குறித்த விளக்கம், நோட்டா, 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் உள்ளிட்டவை குறித்து இந்த விடியோ மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

ஊா்தியில் வெளியிடப்பட்ட விடியோக் காட்சியை அந்தக் கிராம பொதுமக்கள் பாா்த்து விழிப்புணா்வு பெற்றனா்.

கிராம உதவியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT