திருவண்ணாமலை

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: ஆட்டோ ஓட்டுநா் கைது

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமம், காசி நகரைச் சோ்ந்தவா் விஜயராஜ் மகன் அஸ்வின் குமாா் (19). திருவண்ணாமலை தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறாா்.

இதே ஊரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செந்தாமரைக்கண்ணன் (33), ஆட்டோ ஓட்டுநா்.

சில தினங்களுக்கு முன்பு செந்தாமரைக்கண்ணன் கீழ்பென்னாத்தூா் பகுதிக்கு சென்று வரலாம் என்று அஸ்வின் குமாரை அழைத்தாராம். இதற்கு அஸ்வின் குமாா் மறுப்புத் தெரிவித்தாராம்.

இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், கத்தியால் அஸ்வின் குமாரை கத்தியால் குத்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சியாமளா, உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து செந்தாமரைக்கண்ணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT