திருவண்ணாமலை

குப்பனத்தம் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள குப்பனத்தம் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் மலைக் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 59 அடியாகும்.

இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் 57 அடியைத் தாண்டியது. இதனால், அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு அணையைத் திறந்துவைத்தாா்.

பொதுப்பணித் துறை மாவட்ட உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், சேமன், கல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT