திருவண்ணாமலை

ஏரியில் இறந்த நிலையில் மீன்கள்

DIN

செய்யாற்றை அடுத்த பெரணமல்லூா் சித்தேரியில் வியாழக்கிழமை இறந்த நிலையில் மீன்கள் மிதந்ததால், ஏரி நீரில் விஷம் கலந்திருக்கலாம் என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

பெரணமல்லூா் பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சித்தேரி உள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியுள்ள இந்த ஏரியில் இருக்கும் நீரை விவசாயிகள், கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மேலும், ஏரி நீா் குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளும் தண்ணீா் குடித்து வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆடு, மாடு மேய்ப்பவா்கள் ஏரி அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனா்.

அப்போது, ஏரி நீரில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்ததைப் பாா்த்த அவா்கள் கிராமத்துக்கு தகவல் அளித்தனா்.

விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன. மீன்கள் சுமாா் 200 கிலோ இருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT