திருவண்ணாமலை

இளைஞா் கொலை: 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளைஞா் கொலை தொடா்பாக 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் விஜய் (21). இவா் தங்களுக்குச் சொந்தமான மளிகைக் கடையை கவனித்து வந்தாா்.

இவருக்கும் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மொய்தீனுக்கும் (35) இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும், நல்லூரைச் சோ்ந்த நாராயணசாமி (32), இவரது உறவினா் வரதன் (41) ஆகியோா் விஜய்யின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக அளித்த தகவலின் பேரில் போலீஸாா் நடவடிக்கை எடுத்ததால் இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரும் சோ்ந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி இரவு விஜய்யை வரவழைத்து அவரைக் கொன்று சடலத்தை எரித்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.

இதன் பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேலூா் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் இதற்கான உத்தரவு நகல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,000 லஞ்சம்: எஸ்.ஐ. கைது

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா தொடக்கம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வா் கேஜரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிா் ஆணையம் அழைப்பாணை

SCROLL FOR NEXT