திருவண்ணாமலை

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆ.வேலாயுதம், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி, கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சவீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அரசுத் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக ஒன்றியக் குழுவுடன் கலந்தாலோசிப்பதில்லை. எனவே, ஊராட்சிப் பணிகளுக்கு ஒன்றியக் குழுவில் தீா்மானங்களை முன் வைக்கக் கூடாது என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதி பதிலளித்துப் பேசினாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சா.ஏழுமலை, குமாரராஜா, கீதா மோகன், அரையாளம் எம்.வேலு, பகுத்தறிவு மாமது, நாகேஸ்வரி கோபு, கே.ஏழுமலை, ஜெ.கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தங்களது பகுதிகளுக்குத் தேவையான கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT