திருவண்ணாமலை

திருவண்ணாமலை: குறைதீா் கூட்டத்தில் 621 மனுக்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 621 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 621 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT