முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரும் பணி தொடக்கம்

 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நவீன பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நவீன பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. பருவமழையையொட்டி, இந்தப் பகுதியில் அதிகளவு மழை பெய்ததால், கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி சாா்பில் கழிவுநீா் கால்வாய்களை நவீன பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையாளா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.